கட்டுப்பாடுகளை மீறினால் மீன்விற்பனைக்கு தடை: சென்னை மாநகராட்சி ஆணையர்!

கட்டுப்பாடுகளை மீறினால் மீன்விற்பனைக்கு தடை: சென்னை மாநகராட்சி ஆணையர்!
X

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி

கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டால் மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் நாளை 7ம்தேதி முதல் 14ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மீன் விற்பனை, இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சாசிமேடு மீன் சந்தை, சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி வளாகம்ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகைய்ல், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மீன் விற்பனை செய்ய வேண்டும். தவறினால் மீன் விற்பனை செய்வது தடை செய்யப்படும். மீன் அங்காடிக்கு வரும் வியாபாரிகள் அனைவரும் அடுத்த வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் அரசின் மொத்த வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் 12 ஆயிரத்துக்கு 52 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil