தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உள்துறை செயலர் உத்தரவு

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்:  உள்துறை செயலர் உத்தரவு
X

பைல் படம்.

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் பிராபகர் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

சென்னை பெருநகர கிழக்கு போக்குவரத்து துணை ஆணையர் கே.பாலகிருஷ்ணன் திருப்பத்துார் மாவட்ட எஸ்.பி.,யாகவும், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த சிபி சக்ரவர்த்தி சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி.,யாகவும் சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி.,யாக இருந்த ஓம்பிரகாஷ் மீனா சென்னை பெருநகர் கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளராக சந்தீஷ், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக ரஜத் ஆர் சதுர்வேதி, கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக அங்கித் ஜெயின், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சப் டிவிஷன் கண்காணிப்பாளராக வி.வி.சாய் பிரணீத், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா, திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கிராமப்புறம் துணை காவல் கண்காணிப்பாளராக அருண் கபிலன் நியமித்து உத்தரவிட்டுள்ளனர்.

Tags

Next Story