என் கணவர் மீது குண்டாஸ் போட எந்த ஆதாரமும் இல்லை, மதனின் மனைவி கிருத்திகா

என் கணவர் மீது குண்டாஸ் போட எந்த ஆதாரமும் இல்லை, மதனின் மனைவி கிருத்திகா
X

யூ-டியூபர் மதன் அவரது மனைவி கிருத்திகா ( பைல் படம்)

என் கணவர் மீது குண்டாஸ் போட எந்த ஆதாரமும் இல்லை என மதனின் மனைவி கிருத்திகா தெரிவித்தார்.

யூ டியூபில் ஆபாசமாக பேசி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர் மதன், இந்த நிலையில் நீதிமன்ற நிபந்தனை காவலில் இருக்கும் மதனின் மனைவி கிருத்திகா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியதாவது

எனது கணவர் மீது அவதூறுகளை பரப்பி வருகிறார்கள் அது குறித்து தான் விளக்க நான் இங்கு வந்துள்ளேன், மூன்றாண்டுகளாக யூ டியூபில் விளையாடி வரும் எனது கணவர் மதனுக்கு 2 வீடுகள் உள்ளன என்ற அவதூறு பொய்யானது எங்களிடம் அது போன்று எந்த வீடுகளும் இல்லை அப்படி இருந்தால் அதை நிரூபிக்க முடியுமா, என கேள்வி எழுப்பினார்

அதேபோன்று எங்களிடம் சொகுசு கார்கள் ஏதும் இல்லை எங்களிடம் இருப்பது ஒரே ஒரு கார் மட்டுமே என தெரிவித்தார் என்னுடைய வங்கியின் கணக்கில் அவரின் யூ டியூபில் வரும் வருமானம் பதிவு செய்யப்பட்டுள்ளது அது ஒன்றை மட்டுமே வைத்து என்னை கைது செய்தார்கள் மற்ற வேறு எந்த ஆதாரமும் இல்லை எனவும்

இதை விளக்குவதற்காக தான் இன்று காவல் ஆணையரகம் வந்தேன் ஆனால் அவர் மீது அதற்குள்ளாக குண்டாஸ் சட்டம் போட்டு விட்டார்கள்,

பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக கூறுகிறார்கள் ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை இதுவரை அவர் செய்த குற்றத்திற்கு எதையும் ஆதாரங்கள் இல்லாமல் வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளார்கள்,

என் கணவர் போட்ட வீடியோவை சித்தரிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் வேறு மாதிரியாக குரலை வைத்து பதிவு செய்து அவரை பழிவாங்கும் நோக்கத்தோடு செய்திருக்கிறார்கள். அந்த விளையாட்டில் பதிவாகியுள்ள குரல் என்னுடைய குரல் அல்ல எனவும் தெரிவித்தார்

மேலும் என் கணவர் மீது குண்டாஸ் போட எந்த ஆதராமும் இல்லை எதை வைத்து அப்படி வழக்கு பதிவு செய்தார்கள் என கிருத்திகா தெரிவித்தார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!