ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ. 1,000 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை தொடக்கம்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ. 1,000 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை மேற்கொள் ளும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் முழு உடல் பரிசோதனை மையம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் தொடக்க விழா நிகழ்ச்சி ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பாலாஜி தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு முழு உடல் பரிசோதனை மையம், ரூ. 2.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மார்பக புற்றுநோய் கண்டறியும் நவீன உபகரணம், ரூ.25 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம், ரூ. 75 லட்சம் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் உள்ளிட்டவைகளை அமைச்சர் சுப்பிரமணி யன் தொடக்கி வைத்தார் .
மேலும் கொரோனா தொற்று பரவல் காலத்தில் தங்களது சிறப்பான பங்களிப்பு மற்றும் தன்னலமற்ற சேவையாற்றிய அமைப்புசாரா நிறுவனங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட் டோருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்.சுமார் 30 ஆண்டு காலம் ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெறும் உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் ரமேஷ் மற்றும் 12 மருத்துவர்களுக்கு அமைச்சர் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:வடசென்னையில் வாழும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் பெருமளவில் வசித்து வருகிறார்கள். இவர்க ளின் நலன் காக்கும் வகையில் ரூ. 1000 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் ஸ்டான்லி மருத்துவ மனையில் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.மிகக் குறைந்த கட்டணத்தில் நீரிழிவு ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து, தைராய்டு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சார்ந்த நோய்கள் போன்றவற்றை தொடக்கத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க ஏதுவாக இந்த மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவ மனைகளில் இப் பரிசோதனை மேற்கொள் ள ரூபாய் 7,500 முதல் ரூ.10,000 வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதன் செயல்பாட்டினைப் பொறுத்து ஓமந்தூரார், ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை களில் தற்போது செயல்பட்டு வரும் முழு உடல் பரிசோதனை மையங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களும் வெகுவாக குறைக்கப்படும். பொதுமக்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும் இத்திட்டத்தை அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செயல்படுத்திட முயற்சிகளை மேற்கொள்வோம். அதிகரித்து வரும் மார்பக புற்றுநோயை எளிதில் கண்டறியும் வகையில் அதிநவீன கருவி ரூ. 2.50 கோடி செலவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
புற்றுநோய் மற்றும் நரம்பியல் சார்ந்த நோயாளிகள் பயன்பெறும் வகையில் வலி நிவாரண மையம் ரூ.15 லட்சம் செலவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா காலத்தில் மூடி வைக்கப்பட்டிருந்த அறுவை சிகிச்சை அரங்கம் மீண்டும் புனரமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ள நூலகம் மாணவர்கள், மருத்துவர்கள் படித்துப் பயன்பெறும் வகையில் குளிரூட்டப்பட்ட அறையுடன் ரூ. 75 லட்சம் செலவில் அதிநவீன முறையில் சீரமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து விதமான தொற்று நோய்கள், தொற்றா நோய் களை கண்டறிந்து விரைவாக சிகிச்சை அளித்து வருகிறோம். தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தியது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பங்கு மகத்தானது. மிகவும் சிக்கலான காலகட்டத்தில் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக செயல்பட்டதை யாரும் மறந்து விட முடியாது. தமிழகத்தைப் பொருத்தவரை மருத்துவத்துறையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதார ணமாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கட்டமைப்பு வசதிகள்தான். ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றுவது என்பது ஒவ்வொரு மருத்துவர்களின், மருத்துவ பணியாளர்களின் ஆத்மார்த்த விருப்பமாக உள்ளது. இங்கு பணியாற்றி ஓய்வு பெற உள்ள மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் ஓய்வு காலத்தை கழித்திட வாழ்த்துகிறேன் என்றார் அமைச்சர் மா சுப்பிரமணியன்.
இந்நிகழ்ச்சியில் வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரிம்ஸ் ஆர் மூர்த்தி, மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, சென்னை மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் இளைய அருணா, கல்லூரி முதல்வர் டாக்டர் பி பாலாஜி, துணை முதல்வர் டாக்டர் ஜமீலா, மாமன்ற உறுப்பினர் கீதா சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu