பொங்கல் பரிசு தொகுப்பு காணொலியில் அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்

பொங்கல் பரிசு தொகுப்பு காணொலியில் அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்
X
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொங்கல் பரிசு தொகுப்பை சென்னையில் இருந்து காணொலி மூலமாக அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்புடன், கரும்பும் சேர்த்து 21 பொருள்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொங்கல் பரிசு தொகுப்பை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலமாக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு பொங்கல் வாழத்துக்களை தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!