/* */

மேகதாது விவகாரம் : தமிழகஅரசு ஆலோசனையின்றி முடிவு எடுக்கப்படாது. மத்திய அமைச்சர் உறுதி

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் அனுமதி, ஆலோசனை இல்லாமல் எந்த முடிவும் எடுக்கப்படாது என ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உறுதியளித்தார் என்று நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மேகதாது விவகாரம் : தமிழகஅரசு ஆலோசனையின்றி முடிவு எடுக்கப்படாது. மத்திய அமைச்சர் உறுதி
X

பேட்டியளிக்கும் அமைச்சர் துரை முருகன்.

டெல்லியில் ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது.:

உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீர் திறக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுக்க வேண்டும். தமிழக அரசிடம் ஒப்புதல் பெறாமல் கர்நாடகா மத்திய அரசிடம் அனுமதி பெற்றது தவறு.

இதன் காரணமாக மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் வலியுறுத்தப்பட்டது.

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு அனுமதி தராது என அவர் கூறினார். கர்நாடக ஒப்புதல் வாங்கி விட்டதால் மட்டும் மேகதாது அணை கட்டி விட முடியாது .

தமிழகத்தின் கருத்தைக் கேட்காமல் மத்திய அரசு அனுமதி வழங்காது என அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறினார்.காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தரமாக ஒரு தலைவரை நியமிக்க கோரியுள்ளோம்.மொத்தத்தில் பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது " இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 6 July 2021 8:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  5. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  6. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  8. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  9. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  10. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்