மேகதாது அணையை எந்த காலத்திலும் கட்ட அனுமதிக்கக் கூடாது: அதிமுக

மேகதாது அணையை எந்த காலத்திலும் கட்ட அனுமதிக்கக் கூடாது: அதிமுக
X

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார். (பைல் படம்)

தமிழக அரசின் சார்பில் கூட்டப்பட்ட அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக சார்பில் மேகதாது அணையை எந்த காலத்திலும் கட்ட அனுமதிக்கக் கூடாது என கூறியுள்ளோம் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது.

தமிழக அரசின் சார்பில் கூட்டப்பட்ட அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக சார்பில் மேகதாது அணையை எந்த காலத்திலும் கட்ட அனுமதிக்கக் கூடாது என கூறியுள்ளோம். காவிரி உரிமைக்காக அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் போராட்டம் நடத்தி இயக்கம் அதிமுக.

காவிரி நதி நீரை பொறுத்தவரையில் கடந்த கால அதிமுக அரசின் தொடர்சியாக தற்போதைய அரசு சட்ட பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். கடந்த காலங்களை போல அரசியல் செய்ய போவதில்லை. தமிழக நலன் டெல்டா மக்களின் நலன் இது தான் எங்களுக்கு முக்கியம்.

நடுவர் மன்றம் உச்ச நீதிமன்றத்துக்கு இணையானது. கர்நாடக அரசு அணைகட்டுவது எனக்கூறுவது சட்ட விரோதமான செயல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!