தமிழகத்துக்கு குறைந்த அளவு தடுப்பூசியா? சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

தமிழகத்துக்கு குறைந்த அளவு தடுப்பூசியா? சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
X

சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்துக்கு குறைந்த அளவு தடுப்பூசி வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று இரண்டாம் அலைபரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், திடீரென ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.

இந்த விசாரணையில், தமிழகத்திற்கு குறைந்தளவு கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த விஷயம் எங்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழக அரசு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டினை மத்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!