ஸ்டான்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் பேருந்து சேவை தொடக்கம்

ஸ்டான்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் பேருந்து சேவை தொடக்கம்
X

ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரிம்ஸ் மூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காட்சி.

ராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்து வசதியை எம்எல்ஏ ஐட்ரிம்ஸ் மூர்த்தி தொடங்கிவைத்தார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்து வசதியை ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரிம்ஸ் மூர்த்தி தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டான்லி மருத்துவமனையும், ஜெயின் இன்டர்நேஷனல் ஆர்கனிஷயேசன் ஸ்டான்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு என்னவென்றால் ஆம்புலன்ஸில் வரும் நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்காத சூழ்நிலையில் வெளியே நிற்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அந்நேரத்தில் நோயாளிகள் உடனடியாக இந்த பேருந்துக்கு மாற்றப்படுவார்கள்.

இந்த பேருந்தில் 7 நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும். இங்.க 5 பஸ்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. எந்த ஒரு நோயாளியும் காத்திருக்கும் சூழ்நிலை இல்லாமல் செய்யப்படுகிறது.

இப்படி ஒரு சிறப்பான வசதி வட சென்னையில் ராயபுரத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் முதன்முறையாக செய்யபட்டுள்ளது. நானூறுக்கும் மேற்பட்ட படுக்கைகள் முதல்வரின் ஆலோசனைப்படி தயார் செய்யப்பட்டுள்ளது. துரிதமாக செயல்பட்டு இந்த கொரோனாவை ஒழிப்பதற்கு முயற்சி செய்வோம் என்றார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!