2024ல் நிச்சயம் தங்கம் வெல்வேன் சென்னை திரும்பிய மாரியப்பன் தங்கவேலு பேட்டி
பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் நடந்த உயரம் தாண்டும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
2020ம் ஆண்டிற்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 24ந் தேதி முதல் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
இன்றோடு இந்த போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை இல்லாத அளவில் தற்போது வரை இந்தியாவிற்கு 19 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக 54 வீரர்களும் 9 வீராங்கனைகளும் பங்கேற்கேற்றுள்ளனர்.
இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்றார்.சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர் 2வது முறையாக பதக்கம் வென்றுள்ளார்.
கடந்த முறை 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோடி ஜெனிவா பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கம் வென்றிருந்தார். தற்போது டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸிலும் பதக்கம் வென்றுள்ளார்.
பதக்கம் பெற்று டெல்லியில் இருந்து சென்னை வந்தார். சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு தமிழக பாராஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாலை, பூங்கொத்து தந்தனர். பள்ளி மாணவர்கள், குழந்தைகள் உற்சாகமாக வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்க பதக்கத்தை இலக்காக வைத்து சென்றேன். மழை காரணமாக வெள்ளி பதக்கமே வெல்ல முடிந்ததது. 2024ல் நிச்சயம் தங்கம் வெல்வேன் என்றார்.
கடந்த 2016ஆம் ஆண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் அரசு வேலையை அரசு கொடுத்தது. ஆனால் எனக்கு வழங்கவில்லை.
இந்த முறை எனக்கு அரசு வேலை கொடுக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். நிச்சயம் தமிழக முதல்வர் தருவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu