ரூ.5 லட்சம் மதிப்பு ஜெர்மனி போதை மாத்திரைகள்; சுங்கத்துறை பறிமுதல்

ரூ.5 லட்சம் மதிப்பு ஜெர்மனி போதை மாத்திரைகள்; சுங்கத்துறை பறிமுதல்
X

ஜெர்மனியிலிருந்து கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகள்.

ஜொ்மனியிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பு போதை மாத்திரைகள் சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஜொ்மனியிலிருந்து சென்னை பழைய விமானநிலையத்திற்கு வெளிநாட்டு சரக்கு விமானம் ஒன்று நேற்று இரவு வந்தது. அதில் வந்த பாா்சல்களை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் பரிசோதனை செய்தனா். அப்போது ஜொ்மனியிலிருந்து சென்னையில் உள்ள ஒரு முகவரிக்கு வந்த பாா்சல் ஒன்றில் பரிசு பொருள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

சந்தேகமடைந்த சுங்கத்துறையிர், அந்த பாா்சலில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணை தொடா்பு கொண்டனா். ஆனால், அந்த அழைப்பு ஏற்கப்படவில்லை. பின்னர், சென்னை முவரிக்கு சென்று விசாரித்தபோது வீடு பூட்டியிருந்தது. அங்கு இளைஞா்கள் சிலா் தங்கியிருப்பதாக தெரியவந்தது.

இந்நிலையில், சுங்கத்துறையினா், இன்று காலை அந்த பாா்சலை பிரித்து ஆய்வு செய்தனா். அந்த பாா்சலுக்குள் 100 போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுப்பிடித்தனா். அவைகள் மிகவும் விலை உயா்ந்தவை. செல்வந்தா்கள் முக்கியமான பாா்ட்டிகளில் பயன்படுத்துபவைகள். இதன் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.

இதையடுத்து ரூ.5 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், வழக்குப்பதிவு செய்து போதை மாத்திரைகளை பரிசு பொருள் என்ற பெயரில் ஜொ்மனியிலிருந்து வரவழைத்த இளைஞா்களை தேடி வருகின்றனா்.

Tags

Next Story