தற்காலிக ஆசிரியர்கள் பணிக் காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு

தற்காலிக ஆசிரியர்கள் பணிக் காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு
X
2408 தற்காலிக ஆசிரியர்கள் பணி காலம் 3 ஆண்டு நீட்டிப்பு- தமிழக அரசு உத்தரவிட்டது

தமிழகத்தில் 2011-2012 கல்வி ஆண்டில், 2064 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும், 344 உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்களுக்கும் என மொத்தம் 2,408 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர்.

மேலும், ஆசிரியர் அல்லாத 888 பணியிடங்களும் நிரப்பப்பட்டிருந்தன. மொத்தம் 3296 பேர் பள்ளிகளில் தற்காலிக பணியில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு கடந்த 2018 ம் ஆண்டு,3 ஆண்டு பணி நீடிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த கால அவகாசம் தற்போது முடிவடைவதால் மேலும் 3 ஆண்டுகளுக்கு இவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2024- பிப்ரவரி வரை பணி நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!