அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் : நடிகர் சூரி

அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் : நடிகர் சூரி
X
சென்னையில் நடிகர் சூரி பேட்டி
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூரி அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

சென்னை மைலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் கொரோனா பேரிடர் காலத்தில் ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி கலந்துக்கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா இரண்டாம் அலை மிக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தெரிவித்த அவர்,மேலும் ஊடகவியலாளரின் பணி தியாகத்திற்குரிய பணி என்றும் அவர் தெரிவித்தார்

நன்றி தெரிவிக்கும் விதமாக ஊடகத்துறையினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுகிறது என்றும் கொரோனா 3-வது அலை வரவேக்கூடாது என்றும், தடுப்பூசி கட்டாயமாக போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் நடிகர் சூரி கூறினார்.

Tags

Next Story
ai and business intelligence