அனைத்துக் கட்சி குழுவைச் சேர்ந்த திமுக பிரதிநிதி ஆர்.எஸ் . பாரதி பேட்டி

அனைத்துக் கட்சி குழுவைச் சேர்ந்த திமுக பிரதிநிதி ஆர்.எஸ் . பாரதி பேட்டி
X

டெல்லி செல்லும் அனைத்துக் கட்சி குழுவைச் சேர்ந்த திமுக பிரதிநிதி ஆர்.எஸ்.பாரதி விமானநிலையத்தில் பேட்டி அளித்தார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லும் குழுவை சேர்ந்த திமுக பிரதிநிதி ஆர்.எஸ். பாரதி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேட்டி;

மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளிடம் ஆலோசனை கேட்டு எடுக்கப்பட்ட ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கவுள்ளோம். ஒன்றிய அரசிடம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அனைத்து கோரிக்கைகளும் எடுத்து வைக்கிறோம்.

அணை விவகாரத்தில் சட்டப்பாதுகாப்பு இருந்தாலும் கூட படிப்படியாக கோரிக்கைகளை எடுத்து வைப்போம். அதன் முதல் கட்டமாக மேகதாது அணை விவரத்தில் ஒன்றிய அரசை சந்தித்து கோரிக்கை எடுத்து வைக்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்