பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் லியோனி, மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்தார்

பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் லியோனி, மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்தார்
X

திண்டுக்கல் லியோனி (பைல் படம்)

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் லியோனி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் லியோனி மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :-

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவராக வாய்ப்பாளித்துள்ள முதல்வருக்கு நன்றி.

எளிய மக்கள் கல்வியை சுமையாக கருதாமல் சாதாரண குழந்தைகள் விருப்பத்துடன் பாடங்களை படிக்க வேண்டும். இதில் பல புதுமைகளை படைக்க தயாராக இருக்கிறேன்.

ஒன்றிய அரசு எனும் வார்த்தையை மக்கள் சிறப்பாக பயன்படுத்த துவங்கி விட்டனர். அடுத்த பருவ புத்தகங்கள் அச்சிடும் போதும் மத்திய அரசு , ஒன்றிய அரசு என்று புத்தகங்களில் அச்சிடப்படும்

33 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் இருந்த எனக்கு முதல்வர் இந்த வாய்ப்பை அளித்துள்ளார். ஒருவாரத்துக்குள் பொறுபெற்றுக்கொள்வேன் என்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!