/* */

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மே 17 இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மே 17 இயக்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மே 17 இயக்கத்தின் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம்
X

வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது  திருமுருகன்காந்தி பேட்டி அளித்தார்.

சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை இஸ்ரேலின் பெகாசஸ் உளவு செயலியின் மூலம் உளவு பார்த்த பாஜக மோடி அரசை கண்டித்து மே 17 இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன், எஸ்டிபிஐ யின் தெகலான் பாகவி, மதிமுக வின் மல்லை சத்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி:

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு செயலியின் மூலம் இந்தியாவில் நீதிபதிகள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்களின் தொலைப்பேசிகளை உளவு பார்த்து இருக்கிறது.

இந்த பெகாசஸ் உளவு செயலியை வாங்கவில்லை என மோடியோ, அமித் ஷா வோ இதுவரை மறுக்கவில்லை. எனவே இது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் பல மாநிலங்களில் கட்சிகள் உடைக்கப்பட்டுள்ளது, ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மக்களை பாதுகாக்காமல் மோடி, அமித் ஷா வின் அதிகாரத்தை பாதுகாக்கவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 24 July 2021 8:10 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி