சாலை தரம் குறித்து அறிக்கை சமர்பிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவு
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி
சென்னை மாநகராட்சியில், புதுப்பிக்கப்பட்ட சாலையின் தரம் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்ததால், அவற்றை ஆய்வு செய்ய, வட்டார துணை ஆணையர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங்பேடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையி்ல் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில், மாநகராட்சியில், சாலைகள் புதுப்பிக்க ஒப்பந்தம் விடப்பட்டது. பின், தேர்தல், கொரோனா பாதிப்பால், பல இடங்களில் சாலை புதுப்பிக்கும் பணி தற்காலிமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு சாலைகள் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. பொதுமக்கள் புகாரின் அடிப்படையில், சமீபத்தில், தெற்கு வட்டாரத்தில், சில வார்டுகளில் போடப்பட்ட சாலையின் தரம் குறித்து, மாநகராட்சி கமிஷ்னர் ககன்தீப்சிங்பேடி ஆய்வு செய்தார். அப்போது, ஒப்பந்தமதிப்பை விட, 500 முதல், 1,000 அடி நீளம் குறைவாகவும், சாலையின் தரம் மோசமாகவும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வார்டு பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, கமிஷனர் உத்தரவிட்டார்.அதோடு, புதுப்பிக்கப்பட்ட சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப, வட்டார துணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu