மின் விசிறியில் தூக்கிட்டு சி.ஐ.எஸ்.எப்., காவலர் தற்கொலை

மின் விசிறியில் தூக்கிட்டு சி.ஐ.எஸ்.எப்., காவலர் தற்கொலை
X
புதுவண்ணாரப்பேட்டையில், மின் விசிறியில் தூக்கிட்டு சி.ஐ.எஸ்.எப்., காவலர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை, துறைமுக குடியிருப்பைச் சேர்ந்தவர் மகேந்திர குமார், 28. இவர், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர். மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றினார். உயர்நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தார்.

இவரின் அறையில், மகேந்திர குமார் உட்பட மூன்று பேர் தங்கியுள்ளனர். நேற்று, மற்ற இரு காவலர்கள் பணிக்கு சென்று விட்டதால், மகேந்திர குமார் மட்டும் தனியாக இருந்தார்.பணி முடிந்து காவலர்கள் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. பால்கனி வழியாக சென்று ஜன்னலை திறக்க முயற்சித்த போது, உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. இவர்கள் அளித்த தகவலின்படி வந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார், பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மின் விசிறியில் துாக்கிட்டு மகேந்திர குமார் இறந்தது தெரிந்தது.போலீசார் அவரின் உடலைக் கைப்பற்றி, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!