ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் செறிவூட்டி பஸ்கள் வழங்கல்

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் செறிவூட்டி பஸ்கள் வழங்கல்
X

ஆக்சிஜன் செரிவூட்டி அடங்கிய பேருந்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

ஆரண்யா அறக்கட்டளை சார்பில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் அடங்கிய பஸ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஆரண்யா அறக்கட்டளை சார்பில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் அடங்கிய பஸ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆரண்யா அறக்கட்டளை மற்றும் கருணை அறக்கட்டளை ஆகியவை இணைந்து தலா 10 ஆக்சிஜன் செரிவூட்டிகள் அடங்கிய இரண்டு பேருந்துகளை (ஆக்சிஜன் ஆன் வில்ஸ்) உருவாக்கியுள்ளனர்.

இந்த பேருந்துகள் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா பரிசோதனை மையங்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, வடசென்னை தொகுதி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி, ஆரண்யா அறக்கட்டளையின் நிர்வாகி சில்பம் கபூர் ரத்தோர் மற்றும் கருணை அறக்கட்டளையின் நிர்வாகி மகிமா போடார் ஆகியோர் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் உள்ள நியூ சர்ஜிகல் பிளாக்-ல் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்