சென்னை ஸ்டான்லியில் கருப்பு பூஞ்சைக்கு வார்டு தயார்:கலாநிதி வீராசாமி எம்பி தகவல்

சென்னை ஸ்டான்லியில் கருப்பு பூஞ்சைக்கு வார்டு தயார்:கலாநிதி வீராசாமி எம்பி தகவல்
X

கலநிதி வீராசாமி எம்பி.

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வார்டு தயாராக உள்ளதாக கலாநிதி வீராசாமி எம்பி கூறினார்.

சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட பனைமர தொட்டி பகுதியில் மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் சுரேஷ் ஏற்பாட்டில் 200 பேருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இதனை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கு வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, கொரோனா காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கக்கூடிய தொகுதி மேம்பாட்டு நிதி 2019-20 ஆண்டு மற்றும் 2020-21 ஆண்டில் 5 கோடியை 2.5 கோடி கொரோனா நிதிக்காக மத்திய அரசு பிடித்தம் செய்து வைத்திருந்தது. பலமுறை கடிதங்கள் எழுதியும், நாடாளுமன்றத்தில் முறையிட்ட பின்பு தற்போது எம்பிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எம்பி நிதி ரூ.2 கோடி வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.5 கோடியாக வழங்கி வருகிறது. இதனை 10 கோடியாக உயர்த்தி கேட்டிருக்கிறோம்.

கருப்பு புஞ்சை நோய்க்கு 400 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திய அரசிடம் அதற்கான மருந்தை பெற அனைத்து அதிகாரிகளும் வலியுறுத்தி இருக்கிறார்கள். அரசு சார்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனையில் கருப்பு புஞ்சை சிகிக்சைக்கு தனி பிளாக் அமைக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட தயாராகி வருகின்றன என்றார்.

Tags

Next Story
ai in future agriculture