சென்னை: ராயபுரத்தில் விதிகளை மீறி செயல்பட்ட இறைச்சி குடோனுக்கு சீல்!

சென்னை: ராயபுரத்தில் விதிகளை மீறி செயல்பட்ட இறைச்சி குடோனுக்கு சீல்!
X

பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டு இறைச்சி.

சென்னை ராயபுரத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இறைச்சி குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்ததை தொடர்ந்து முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுளளது. கூட்டம் கூடுவதை தவிர்க்க அனைத்து கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை ராயபுரத்திற்கு உட்பட்ட சிதம்பரம் நகர் பகுதிகளில் தடையை மீறி ஆடுகள் வெட்டப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சுகாதார ஆய்வாளர் தலைமையிலான அதிகாரிகள், கதவை திறந்து பார்த்தபோது சுமார் 10 க்கும் அதிகமான சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான ஆடுகள் வெட்டப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ராயபுரம் மண்டலம் சுகாதார பிரிவு அதிகாரிகள் முழு ஊரடங்கு தடையை மீறி செயல்பட்ட ஜேஎன்எஸ் டிரேடர்ஸ் நிறுவனத்திற்கு சீல் வைத்து சுமார் 100 கிலோ எடை கொண்ட ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!