சென்னையில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னையில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
X
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்பொழுது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.

நேற்று நிலை கொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்பொழுது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று மாலை கடந்து செல்லும். இதனால் சென்னையில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கரையோர பகுதிகளில் தரைக்காற்று 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும்.

விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!