மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை: பட்ஜெட் குறித்து ஜெயக்குமார்
பைல் படம் முன்னாள் அமைச்சே ஜெயக்குமார்.
இதுகுறித்து அவர் சென்னையில் நிருபர்களிடம் அளித்த பேட்டியில், பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மக்களுக்கு டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் டிமிக்கிதான் தமிழக பட்ஜெட். வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு கடன், கடன் என்கின்றனர்.
யானை பசிக்கு சோளப் பொரி போல தமிழக பட்ஜெட் உள்ளது. பரிசீலிக்க குழு அமைக்கப்படும், ஆராயப்படும் என்றுதான் கூறுகிறார்கள். தெளிவான நிலை இல்லை. பெட்ரோல் மீதான வரியை பெயருக்கு ரூ.3 குறைத்துவிட்டு வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பார்கள்.
நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதாகக் கூறி மாணவர்களை திமுக அரசு குழப்பிவிட்டது.
வெள்ளை அறிக்கை வெளியிட்டது அவசியமில்லாதது. 2011- கஜானாவை காலி செய்து விட்டுதான் திமுக ஆட்சி சென்றது. 2011- ஏற்பட்ட தாக்கம்தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் நீடித்தது. அடுத்து சொத்துவரி, பேருந்து, மின்கட்டண உயர்வு என எல்லாவற்றையும் கொண்டு வருவார்கள் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu