திருமாவளவன் பக்ரீத் வாழ்த்து
பைல் படம்
ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிைகை உலகளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும். இப்ராஹிம் நபிகளாரின் நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் வரும் 21ம் தேதி கொண்டாடப்படும் தலைமை ஹாஜி சலாஹுத்தீன் முஹம்மத் ஆய்யூப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இஸ்லாமியர்களுக்கு வெளியிட்ட பக்ரீத் வாழ்த்து செய்தியில், இறைத்தூதர்களுள் ஒருவரான இப்ராஹிம் இறையச்சத்தை இறைவன் சோதித்தப் பின்னணியாக நினைவுக்கூர்வதே பக்ரீத் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
இறைத்தூதர் அவர்கள் இறைவனின் அசரீரி ஆணையைக் கேட்டு இறையச்சத்துடன் தனது குழந்தையைப் பலிகொடுக்க ஒரே மகனையும் ஈகம் செய்ய துணிந்தாரென்றும் அதனையடுத்து இறைவன் அந்தப்பலியைத் தடுத்தாரென்றும் கூறப்படுகிறது. நபி இப்ராஹிம் அவர்களின் அத்தகைய இறையச்சம் மற்றும் ஈகம் ஆகியவற்றை நினைவுகூர்ந்திடும் பண்பாட்டுப் பெருவிழாவின் மூலம் அவை தலைமுறை தலைமுறையாக இஸ்லாமியருக்குப் போதிக்கப்பட்டு வருகிறது.
இது இஸ்லாமியருக்கு மட்டுமின்றி இறை நம்பிக்கையுள்ள யாவருக்குமான போதனையே ஆகும். இத்தகைய நன்னாளில் இஸ்லாமியப் பெருங்குடிமக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu