தமிழக பல்கலைக்கழகங்களுடன் ஆஸ்திரேலியா 83 புரிந்துணர்வு ஒப்பந்தம்:உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல்

தமிழக பல்கலைக்கழகங்களுடன் ஆஸ்திரேலியா 83 புரிந்துணர்வு ஒப்பந்தம்:உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல்
X

சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் ஆஸ்திரேலியா 83 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்று உயர் கல்வித்துைற அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

கல்லூரிகள் திறப்பது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்

உயர்கல்விதுறை அமைச்சரை ஆஸ்திரேலியா நாட்டு தூதரக அதிகாரிகள் மரியாதை, நிமித்தமாக சந்தித்தனர் , இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி :-

தமிழக முதல்வர் ஆணைக்கு இணங்க தமிழகத்தில் உயர் கல்வி துறை வளர்சியை பெரிதாக்க வேண்டும் என்கிற நோக்கில். தமிழகத்தில் உள்ள பல்கலை கழகங்களில் 83 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டு இருக்கிறது.

மதுரை கோவை திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் பல்கலை கழகங்களை அமைக்க வேண்டும் என கேட்டிருக்கிறோம். தமிழகத்தின் உயர் கல்வி வளர்சிக்கு ஆஸ்திரேலியா உறுதுணையாக இருக்கும்.

முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை ஆலோசித்து கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்