கொலை முயற்சி வழக்கில் ஜெயக்குமாருக்கு மார்ச்11-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

கொலை முயற்சி வழக்கில் ஜெயக்குமாருக்கு மார்ச்11-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
X

பைல் படம்.

கொலை முயற்சி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச்11-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்தாண்டு ஜூன் மாதம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். ரூ. 5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்து கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், அவரது மருமகன் நவீன்குமார், மகள் ஜெயப்பிரியா ஆகியோர் மீது மகேஸ் புகார் அளித்தார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு கடந்த 24-ம்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.120(பி)- கூட்டுசதி, 447-அத்துமீறி நுழைதல், 326- பயங்கர ஆயுதங்களை கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல், 397- பயங்கர ஆயுதங்களால் கொள்ளையில் ஈடுபடுதல், 506(2)-கொலை மிரட்டல், 109- குற்றம் செய்ய தூண்டுதல்ஆகிய 6 பிரிவுகளின் கீழ் மத்தியகுற்றப்பிரிவு போலீசார் ஜெயக்குமார் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடந்த 25-ம்தேதி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இன்று ஆலந்தூர் ஜேஎம்-1 குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் வைஷ்ணவி முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆஜர்படுத்தினர்.

இது குடும்ப சொத்து தொடர்பான வழக்கு இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது.தி.மு.க. அரசு தன்மீது வேண்டுமென்று பழிவாங்க போடப்பட்ட வழக்குஅண்ணன் தம்பிக்கும் இடையே உள்ள ஒரு சொத்துப் பிரச்சினை.இந்த விவகாரத்தில் என்னை எப்படி சேர்க்க முடியும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இது சிவில் வழக்கு இதில் எப்படி நில அபகரிப்பு வரும்.

இந்த வழக்கு முழுவதும் அண்ணன் தம்பிக்கும் இடையே உள்ள ஒரு சொத்துப்பிரச்சினை இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எந்த வித தொடர்பும் இல்லை எனவே இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களிடம் கூறும்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தமிழக அரசும், காவல்துறையும் தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது தற்போது புதிதாக ஒரு வழக்கை போட்டு உள்ளனர். அவர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பொய் வழக்குகள் போடப்பட்டு உள்ளது.

ஜெயகுமார் மருமகன் நவீன் மற்றும் அவரது அண்ணனுக்கும் இடையான சொத்து பிரச்சினை உள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணன் தம்பி சொத்து பிரச்சனை என கூறி சமரச மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் இருவருக்கும் சமரசம் ஏற்படவில்லை. இதில் நவீனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செயல்பட்டதாக கூறி கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக நபரை தாக்கிய வழக்கில் சிறையிலிருக்கும் ஜெயக்குமார் வெளியே வரக்கூடாது என்பதற்காக புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சிறையில் அடைப்பதற்காக நீதிமன்றம் கொண்டு வந்துள்ளனர்.

இதில் உருட்டுக்கட்டை உடன் வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக தவறான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தப் பிரிவுகள் வேண்டுமென்று சேர்க்கப்பட்டுள்ளன. அவரை அவமானப்படுத்த வேண்டும் என்றும், சிறையிலிருந்து பெயிலில் வெளியே வரக்கூடாது என்றும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி அவரை வெளியே விடாமல் தடுப்பதற்காக காவல்துறையும் செயல்படுகிறது. சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக கூறப்படும் மாநிலத்தில் இதுபோன்று நடப்பது முறை அல்ல. ஒரு அமைச்சராக இருந்த ஒவருக்கு இந்த நிலைமை என்றால் சாமானியனுக்கு என்ன நிலைமை ஏற்படும் என்றார்.

இந்தநிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வரும் மார்ச் 11 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க ஆலந்தூர் ஜெ.எம் 1 குற்றவியல் நீதிமன்ற நடுவர் வைஷ்ணவி உத்தரவிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!