பாமக வளர்ச்சியில் அதிமுகவுக்கு பங்கு உண்டு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பாமக வளர்ச்சியில் அதிமுகவுக்கு பங்கு உண்டு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
X

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

அதிமுகவை சிறுமைப்படுத்தும் செயல்களில் அவர் ஈடுபட்டால் நாங்களும் அதற்கு பதிலடி கொடுக்க தயாராகவே இருப்போம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் வளர்ச்சியில் அதிமுகவிற்கு முழு பங்கு உள்ளது. எனவே அதிமுகவை சிறுமைப்படுத்தும் செயல்பாடுகளை அன்புமணி ராமதாஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக தேர்தல் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கலந்து கொண்டார்.அப்போது செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது:

தற்போது அதிமுக நான்கு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. எனவே பாமக தமிழகத்தில் முக்கிய இடத்தை பெரும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆனால் 1991-ல் ஒரேயொரு சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்ற பாமக 2001 - ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 20 இடங்களை கைப்பற்றியது அதிமுகவின் உதவியால் தான் என்பதை கருத்தில் கொண்டு அன்புமணி பேச வேண்டும்.அதிமுகவை சிறுமைப்படுத்தும் செயல்களில் அவர் ஈடுபட்டால் நாங்களும் அதற்கு பதிலடி கொடுக்க தயாராகவே இருப்போம்.

அரசு ஊழியர்களின் நலன் அனைத்தும் பாதுகாக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த திமுக இன்று அவர்களை கண்டு கொள்ளாதது மட்டுமல்லாது தொடர்ந்து புறக்கணித்து வருவதால் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம வேலை, சம ஊதியம் என்றெல்லாம் பேசியவர்கள் இதற்கு என்ன பதில் அளிக்க போகிறார்கள். எதற்கெடுத்தாலும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமித்தால் பிறகு சமூக நீதி எப்படி கிடைக்கும்? இது இதுதான் திமுக அரசின் கொள்கையா என்பதை முதல்வர் மு.க .ஸ்டாலின் விளக்க வேண்டும்

தேர்தல் அதிமுக பொதுக்குழுவில் எடுத்த முடிவுகளின் படி தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. மேலும் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இதில் அனைத்து நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். எனவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தான் உண்மையான அதிமுக என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஓ பன்னீர்செல்வம் தன்னை தக்க வைத்துக் கொள்வதற்காக உண்மைக்கு மாறான தகவல்களை கூறிக்கொண்டு போலியான அரசியலை நடத்தி வருகிறார் . அவரால் அதிமுகவை ஒன்றும் செய்து விட முடியாது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பாக இயங்கி வருகிறது. எனவே ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள கடிதத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்வதால் எந்தவித பலனும் அவருக்கு ஏற்படப்போவதில்லை என்றார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு அதிமுக அலுவலகத்திற்கு தமிழக தலைமை தேர்தல் ஆணையம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் கடிதத்தினால் அதிமுகவில் மீண்டும் இரட்டைத்தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ளது. நான்தான் இடைக்கால பொதுச்செயலாளர் என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னாலும் ஓ.பன்னீர் செல்வம் தான்தான் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருகிறார். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே தற்போது கடிதம் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!