திருமண மண்டபங்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம், சென்னை மாநகராட்சி

திருமண மண்டபங்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம், சென்னை மாநகராட்சி
X

சென்னை மாநகராட்சி (பைல் படம்)

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா வழிமுறைகளை மீறியதாக 17 திருமண மண்டபங்களுக்கு 84 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா வழிமுறைகளை மீறியதாக 17 திருமண மண்டபங்களுக்கு 84 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், திருமண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளத்தின் வாயிலாக தெரியப்படுத்த மண்டப உரிமையாளர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் அரசின் வழிமுறைகளை பின்பற்றாத திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அதிகபட்சமாக ராயபுரத்தில் ஒரு திருமண மண்டபத்திற்கு ரூபாய் 30 ஆயிரமும், அண்ணாநகரில் 4 திருமண மண்டபங்களுக்கு ரூபாய் 21 ஆயிரமும், மாதவரத்தில் 5 திருமண மண்டபங்களுக்கு ரூபாய் 14,500, அதேபோல் திருவெற்றியூர், வளசரவாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் 17 திருமண மண்டபங்களில் கொரோனா வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத காரணத்திற்காக ரூபாய் 84 ஆயிரம் அபராதம் விதித்து சென்ன மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!