கொரோனா 3 வது அலை பணிகளுக்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, அரசாணை வெளியீடு

கொரோனா 3 வது அலை பணிகளுக்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு,  அரசாணை வெளியீடு
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (பைல் படம்)

தமிழகத்தில் கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிசனை வாங்குவதற்காகவும், கொரோனா மூன்றாவது அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 100 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிசனை வாங்குவதற்காகவும், கொரோனா மூன்றாவது அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 100 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

தமிழக மக்கள் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கைகொடுக்கும் வகையில் நிதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க இன்று வரை 353 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டு உள்ளது. இந்த நன்கொடைகள் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என முதல்வர் தெரிவித்தவாறே பெறப்பட்ட நிதியிலிருந்து ரெம்டேசிவர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும் மற்ற மாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜனை ரயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்கு தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும் முதல் கட்டமாக 50 கோடி ரூபாயை வழங்கிடவும் இரண்டாவது கட்டமாக பரவல் கட்டுப்படுத்துவதற்காக ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் நாள்தோறும் 1.6 லட்சமாக மேற்கொள்ளப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு இப்பரிசோதனைக்கான கிட்டுகளை வாங்குவதற்கு 50 கோடி ரூபாய் வழங்கிட மு.க ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, சிப்காட் நிறுவனம் மூலம் சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளிலிருந்து ஆக்ஸிஜன் உருளைகள், ஆக்சிசன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவ கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி ரூபாயும் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சை தேவைப்படும் ஆம்போ டெரிசின் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்கும் 25 கோடி ரூபாயையும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து ஆணை அறிவித்திருந்தார்.

தற்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் மருத்துவ ஆக்சிசனை வாங்குவதற்காகவும் மூன்றாவது அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself