ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சவால்

திமுக தலைவர் ஸ்டாலின் ராயபுரத்தில் நேரடியாக போட்டியிட தயாரா என அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்தார்.
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழுக்காக உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பழைய வண்ணாரப்பேட்டை முதல் மூலக்கொத்தளம் வரை மௌன ஊர்வலம் நடைபெற்றது. இதனை தொடங்கி வைப்பதற்கு முன் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் பெட்டியில் தான் இருக்கும் வெளி வராது. தமிழகம் இன்று அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது.அவர்கள் வந்தால் தொந்தரவு இருக்கும், எல்லோரும் வெளியேறும் செல்லும் சூழல் இருக்கும்.
மீனவர்களின் பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமே திமுக தான். திமுக தலைவர் ஸ்டாலின் ராயபுரத்தில் நேரடியாக போட்டியிட தயாரா என அமைச்சர் சவால் விடுத்தார்.நான் ராயபுரத்தில் போட்டியிட தான் விருப்பம் தெரிவிப்பேன். ஸ்டாலின் போன்று தொகுதி மாற மாட்டேன் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu