தென்சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி வெட்டி கொலை

தென்சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி வெட்டி கொலை
X
தென் சென்னையில் ரவுடியாக வலம் வந்த நாகூர்மீரான், மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை ஆலந்துாரைச் சேர்ந்தவர் நாகூர்மீரான், 28. தென் சென்னையில் ரவுடியாக வலம் வந்த இவர் மீது, ஆதம்பாக்கம், கே.கே.நகர், குன்றத்துார், கொரட்டூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில், கொலை முயற்சி, வழிப்பறி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

பள்ளிக்கரணை அடுத்த வெள்ளக்கல் பகுதியில் வசித்து வந்த நாகூர் மீரான், நேற்று மாலை தன் நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகருக்கு சென்றார். மூன்றாவது தெருவில் அவரை பின் தொடர்ந்த கும்பல் ஒன்று, சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. ரத்த வெள்ளத்தில் மிதந்த நாகூர்மீரான் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

ஆதம்பாக்கம் போலீசார் அவரின் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!