திருமணம் செய்ய கட்டுப்பாடுகள்..? தமிழக அரசு
தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வந்துவிட்டதால் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோயில் திருவிழாக்கள், மதம் சம்பந்தமான கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இச்சூழலில் இந்து சமய அறநிலைய துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு இன்று (ஏப்ரல் 10) முதல் தடை விதிக்கப்படுகிறது. கோயில்களில் பொதுமக்கள் வழிபாடு இரவு 8 மணிவரை அனுமதிக்கப்படும். திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.
திருமண விழாக்களுக்கு 10 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது. கோயில்களில் உள்ள திருமண மண்டபத்தில் அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும். ஒரே நேரத்தில் 50 நபர்களுக்கு மேற்படாமல் அனுமதித்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று அறிக்கை வெளியிட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu