தமிழகத்தில் பதிவுத்துறை வருமானம் கடந்தாண்டை விட பலகோடி அதிகரிப்பு

தமிழகத்தில் பதிவுத்துறை வருமானம் கடந்தாண்டை விட பலகோடி அதிகரிப்பு
X
கடந்த ஏப்ரல் மாதம்1ம் தேதி முதல் செப்.16ம் தேதி வரையில் ரூ.5,388.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

பதிவுத்துறையில் கடந்த 1ம் தேதி ஏப்ரல் மாதம் முதல் செப்.16ம் தேதி வரையில் ரூ.5,388.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்தாண்டு வருவாயை விட ரூ.2020.81 கோடி கூடுதலாக எட்டியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பத்திரங்களின் பதிவு குறைந்து காணப்பட்டது. பதிவுத்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றம் காரணமாக இத்துறையால் ஈட்டப்படும் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம்1ம் தேதி முதல் செப்.16ம் தேதி வரையில் ரூ.5,388.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்தாண்டு வருவாயை விட ரூ.2020.81 கோடி கூடுதல் இந்தமுறை கிடைத்துள்ளது.

பத்திர பதிவுத்துறை அமைச்சர் சார்பதிவக எல்லைகள் பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப சீரமைக்கப்படும் என சட்டசபையில் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் சீரமைப்பட வேண்டிய சார்பதிவக எல்லைகள் குறித்த தகவல்களை அந்தந்த மாவட்ட பதிவாளர்களுக்கு எழுத்து மூலமாக பொதுமக்கள் தெரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai as a future of cyber security