கட்டுமான நிறுவனங்களுக்கு ரியல் எஸ்டேட் ஆணையம் எச்சரிக்கை

கட்டுமான நிறுவனங்களுக்கு ரியல் எஸ்டேட் ஆணையம் எச்சரிக்கை
X

புதிதாக கட்டிட அனுமதி பெற்ற, கட்டுமான நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் 15 நாள்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் அபாரதம் விதிக்கப்படும் என்று ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பி வருகிறது.

வீடுகள், மனைகள் வாங்கும் நபர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தீர்த்து வைக்கும். 8 வீடுகளுக்கு அதிகமாக வணிக நோக்கில் கட்டப்படும் கட்டிடங்களை கட்டுமான நிறுவனங்கள் ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயம். பெரும்பாலும் பலரும் ஆணையத்தில் பதிவு செய்வதில்லை. சிஎம்டிஏ மற்றும் டிடிசிபியில் புதிதாக கட்டிட அனுமதி பெற்ற நிறுவனங்கள் விவரங்களை சேகரித்து ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தி ரியல் எஸ்டேட் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வருகிறது. நோட்டீஸ் பெறப்பட்ட 15 நாள்களுக்குள் கட்டுமான நிறுவனங்கள் பதிவுக்கு வராவிட்டால், ரியல் எஸ்டேட் சட்டப்படி அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story