சென்னையில் மழைநீர் தேக்கம், போக்குவரத்து மாற்றம்: தற்போதைய நிலவரம்
சென்னையில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்த தற்போதைய நிலவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடக்கிழக்கு பருவமழையை முன்னிட்டு இன்று மாலை 2 மணி நிலவரப்படி, மழைநீர்பெருக்கு காரணமாக வியாசர்பாடி, மேட்லி, காக்கின், (மூலக்கொத்தளம் to கொருக்குப்பேட்டை சாலை) ஆகிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் அம்பேத்கார் கல்லூரி சாலையில் 2 அடி மழைநீர் தேங்கியுள்ளதால் பெரம்பூர் பேரக்ஸ்ரோடு X ஸ்டரகான் ரோடுசந்திப்பில் இருந்து புளியந்தோப்பு போலீஸ் ஸ்டேஷன் (ஆர்த்தி அப்பார்ட்மென்ட்ஸ்) நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
அவ்வாகனங்கள் ஸ்டரகான்ஸ் ரோடு மற்றும் புளியந்தோப்பு நெடுஞ்சாலை வழியாக திருப்பிவிடப்படுகின்றன. II) K-5 பெரவள்ளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 70 அடி சாலையில் 2 அடி நீர் சாலையில் தேங்கி உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எல்.பி சாலையில் 01 அடி மழை நீர் தேங்கி உள்ளதால் சாஸ்திரி நகர் சந்திப்பில் இருந்து அடையாறு சிக்னல் நோக்கி செல்லும் வாகனங்கள் மிகவும் மெதுவாக செல்கிறது. (இலகு ரக வாகனங்களும் மற்றும் இருச்சக்கர வாகனங்களும் வேறு பாதையில் திருப்பி விடப்படுகிறது) iv) டிமலஸ் சாலை - புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் 01 அடி மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை .
நசரத்பேட்டை நீதிமன்றம் அருகில் 01 அடி மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யவில்லை.
திருமலைப்பிபாளை ரோடு, காமராஜர் இல்லம் முன்புசாலையில் பானம் ஏற்பட்டுள்ளது. இதனால்வள்ளுவர் கோட்டம் நோக்கிவாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
வாணிமஹால் - பென்ஸ்பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பிவிடப்படுகிறது. வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வாணிமஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பின்ளை ரோட்டில் செல்லலாம்.
இன்று நகரில் மரங்கள் எதுவும் விழவில்லை என தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu