சென்னையில் மீண்டும் மழை...உற்சாகத்தில் மக்கள்

சென்னையில் மீண்டும் மழை...உற்சாகத்தில் மக்கள்
X

சென்னையில் பெய்த மழை காட்சி

சென்னையில் மீண்டும் இன்று காலை மழை தூரியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. இதனால் நாள்தோறும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னையில் மீண்டும் மழை பெய்துள்ளது. நேற்று வெயில் கொளுத்திய நிலையில் இரவில் கடும் வெப்பம் நிலவியது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

மேலும் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியாக காணப்படுவதால் மக்கள் சற்று வெயில் கொடுமையில் இருந்து தப்பித்து நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்