கல்லூரிகளுக்கு பேராசிரியர்கள் வரக்கூடாது: தமிழக அரசு எச்சரிக்கை

கல்லூரிகளுக்கு பேராசிரியர்கள் வரக்கூடாது:  தமிழக அரசு எச்சரிக்கை
X
பேராசிரியர்களை கல்லூரிகளுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது என்று, கல்லூரி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் அரசின் உத்தரவை மீறி பெரும்பாலான கல்லூரிகள், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்காக பேராசிரியர்களை, கல்லூரிகளுக்கு நேரில் வரவழைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு, கல்லூரிக் கல்வி இயக்ககம் விடுத்துள்ள எச்சரிக்கையில், ஆன்லைன் வகுப்பு எடுக்கவோ, NAAC சார்ந்த பணிகள் அல்லது இதர பணிகளுக்காக பேராசிரியர்களை, கல்லூரிகளுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது.

மேலும், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, கல்லூரிக்கு வருமாறு பேராசிரியர்களுக்கு அழுத்தம் தருவதை இனி தவிர்க்க வேண்டும். கொரோனா கட்டுப்பாடுகல் தொடர்பான அரசின் உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று, தமிழக அரசின் கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!