வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு -புதிய ரேட் அறிவிப்பு

வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு  -புதிய ரேட் அறிவிப்பு
X
வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலை மட்டும் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம். இந்நிலையில், வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலை மட்டும் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தற்போது விலை உயர்த்தப்படவில்லை.

இதன்படி, 19 கிலோ வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை 43.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை 1874.5 ரூபாயாக உயர்ந்துள்ளது. டெல்லியில் ஒரு வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை 1736.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன் செப்டம்பர் 1ஆம் தேதி வர்த்தக கேஸ் சிலிண்டர்களின் விலை 75 ரூபாய் உயர்த்தப்பட்டது. அப்போது சென்னையில் ஒரு சிலிண்டர் 1831 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் விலை உயர்த்தப்பட்டு 1874.5 ரூபாயாக உள்ளது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களின் விலை தற்போது மாற்றப்படவில்லை. இதற்கு முன், வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai healthcare technology