சென்னையில் மறைமுகமாக குட்கா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்

சென்னையில் மறைமுகமாக குட்கா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்
X

தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட நபர்.

சென்னையில் அரசு தடை செய்யப்பட்ட குட்காவை மறைமுகமாக விற்பனை செய்து வந்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட குட்காவை மறைமுகமாக விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கையும் களவுமாக தனிப்படை போலீசார் பிடித்துள்ளனர்.

சம்சு ஸ்டோர் டீச்சர்ஸ் காலனி மெயின் ரோடு கொடுங்கையூர் உட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளரின் தனிப்படையினர் உதவி ஆய்வாளர் கன்னியப்பன் மற்றும் ஆடலரசு ஆகியோருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குட்கா வஸ்துக்களை விற்பனை செய்வது சோதனை செய்ததில் உறுதியானது.

பின்னர் கடையில் உள்ள வியாபாரியை காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அகமது இஷா என்பதும் வ/து 43 த/பெ. அப்துல் வாஹாப் டீச்சர்ஸ் காலனி மெயின் ரோடு கொடுங்கையூர் இருப்பதாகவும் தெரிவித்தார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள்.

1) ஹன்ஸ் .04.500.கிலோ, 2)ரிபோ 3.500.கிலோ, 3)விமல் குட்கா 01.800*4) கூலிப் 01.200.கிலோ 5)V1.0.700 g.m. 6) சுவாகத் 500 கிராம் 7)மாவா 1.500.கிலோ

ஆகிய அனைத்தையும் கொடுங்கையூர் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குற்றவாளியான அகமத் திசாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்..

Tags

Next Story
Weight Loss Tips In Tamil