/* */

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் காவல் துறை துரித நடவடிக்கை எடுத்திருக்கிறது: கொமதேக

கோவை மக்கள் பயப்படவில்லை. ஒரு சில அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள் என கொமதேக பொதுச்செயலர் ஈஸ்வரன் தெரிவித்தார்

HIGHLIGHTS

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் காவல் துறை துரித நடவடிக்கை எடுத்திருக்கிறது: கொமதேக
X

கொமதேக பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் காவல் துறையினருடைய நடவடிக்கைகள் துரிதமாக நடந்திருக்கிறது. கோவை மக்கள் பயப்படவில்லை. ஒரு சில அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள் என்று கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் விரும்பத்தகாத ஒரு நிகழ்வு. அனைத்து கோணங்களிலும் காவல்துறை விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தலாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணையை மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது. இந்த சம்பவத்திற்கான தொடர்புகள் வெளி மாநிலங்களிலும் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் தான் தேசிய புலனாய்வு முகமைக்கு தமிழக முதலமைச்சர் தலைமையில் கூடிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.

தேசிய புலனாய்வு முகமையும், தமிழக காவல்துறையும் ஒன்றிணைந்து எடுத்திருக்கின்ற நடவடிக்கைகள் இது போன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நாடு முழுவதும் எங்கேயும் நடக்காத ஒரு சூழலை உருவாக்க வேண்டும். தமிழக காவல்துறை மிக விரைவாக இயங்கி குற்றவாளிகளை கைது செய்து இருக்கிறார்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்துக்கள் இல்லை. இந்த விசாரணை வாய்ப்பை பயன்படுத்தி இது போன்ற நடவடிக்கைகளுக்கு திட்டமிடுகின்றவர்கள், துணை போகிறவர்கள் அனைவரையும் முழுமையாக கண்டறிந்து தமிழ் மண்ணில் இந்த முயற்சிகள் பலிக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

கோவையில் வாழுகின்ற அனைத்து தரப்பினரும் எந்தவிதமான பயமும் இல்லாமல் சுமுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காவல்துறை பார்த்துக் கொள்ளும் என ஒரு முழு நம்பிக்கையோடு இருக்கின்றார்கள். தமிழக முதலமைச்சர் அவர்கள் மூன்று புதிய காவல் நிலையங்களுக்கு உத்தரவிட்டும், அதிகப்படியான காவல் துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.

காவல் துறையினருடைய கண்காணிப்பு வலுவாக இருந்த காரணத்தினால் தான் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது. காவல் துறையினருடைய நடவடிக்கைகளையும், அரசின் உறுதியையும் புரிந்து கொண்ட கோவை மக்கள் தைரியமாக இருக்கிறார்கள். எப்போதும் போல வாழ்க்கையை நடத்துகிறார்கள். ஆனால் சில அரசியல்வாதிகள் தான் பயப்படுகிறார்கள். அந்த பயத்தை மக்கள் மீது திணிக்க முயற்சியும் செய்கிறார்கள். யாரும் பயப்பட வேண்டியது இல்லை என்பதைத்தான் தமிழக காவல்துறை அனைவரையும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசோடு நின்று மக்களின் பயத்தை போக்க வேண்டும். மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதுதான் அனைத்து அரசியல் தலைவர்களுடைய எதிர்பார்ப்பும், நோக்கமுமாக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்துவதிலே தவறு இல்லை. ஆனால் மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்குகிற விதைகளை விதைப்பதை தவிர்க்க வேண்டும்.

சம்பவம் நடந்தவுடன் காவல்துறை தரப்பில் எந்த தாமதமும் இல்லாமல் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள். இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை தமிழக காவல்துறையும், தேசிய புலனாய்வு முகமையும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் மேற்கொள்ள வேண்டு மென்ற கோரிக்கையை அனைவரும் சார்பாகவும் வைப்போம். விசாரணைக்கும், நடவடிக்கைகளுக்கும் பொது வெளியில் சொல்லப்படுகின்ற கருத்துகள் தடையாக இருந்து விடக்கூடாது.

தமிழக காவல்துறை தமிழக முதலமைச்சருக்கு தான் அவ்வப்போது செய்திகளையும், நிலவரங்களையும் பகிர்வார்களோ தவிர அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பகிர முடியாது. இதுபோன்ற விஷயங்கள் அரசியல் கட்சித் தலைவர் களை விட முன்னால் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். தமிழக காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமையின் உடைய விசாரணைக்கு உரிய கால அவகாசத்தை கோவை பகுதி பொதுமக்கள் கொடுக்க வேண்டும். பொதுமக்களுடைய நடவடிக்கைகள் எக்காரணம் கொண்டும் அதிகாரிகளுக்கு ஒரு விதமான அழுத்தத்தை கொடுத்து விடக்கூடாது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 1 Nov 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்