தமிழகத்தில் பிளஸ் 2 துணை தேர்வு ரிசல்ட், இன்று வெளியாகிறது

தமிழகத்தில் பிளஸ் 2 துணை தேர்வு ரிசல்ட், இன்று வெளியாகிறது
X

பைல் படம்

தமிழக பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.

பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது. தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 15, 16ம் தேதிகளில் தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சென்று பதிவு செய்ய வேண்டும். விடைத்தாள் நகலுக்கு, ஒரு பாடத்துக்கு தலா ரூ. 275. மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305 மற்ற பாடங்களுக்கு தலா ரூ. 205 கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!