தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2ம் கட்ட வாக்கு பதிவு துவங்கியது.

முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதி நடைபெற்றது. இன்று (அக்.9 ஆம் தேதி) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

62 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 626 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 1,324 ஊராட்சித் தலைவர்கள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 உள்ளாட்சி பதவிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். தேர்தலுக்காக மொத்தம் 6.652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 34,65,724 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். வாக்குப்பதிவு பாதுகாப்புப் பணியில் 17,130 போலீஸார், 3,405 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடக்கிறது. மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
smart agriculture iot ai