சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசு உயர்வு

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசு உயர்வு
X
சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலைக்கேற்ப எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

அவ்வகையில், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.79- ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 97.59 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து 102.10 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 97.93 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகின்றன. பெட்ரோல் விலை லிட்டருக்கு ௩௧ காசுகள் அதிகரித்து இருப்பது, வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது