முன்னாள் ஆளுநரிடம் அளித்த மனுக்கள் குப்பைத்தொட்டிக்கு போனது: வைகோ கருத்து

முன்னாள் ஆளுநரிடம் அளித்த மனுக்கள் குப்பைத்தொட்டிக்கு போனது: வைகோ  கருத்து
X

மதிமுக பொதுச்செயலர் வைகோ

7 பேர் விடுதலைக்காக முன்னாள் ஆளுநரிடம் அளித்த மனுக்கள் குப்பைத்தொட்டியில் போடப்பட்டுள்ளன என்றார் வைகோ

முன்னாள் ஆளுநரிடம் அளித்த மனுக்கள் குப்பைத்தொட்டியில் போடப்பட்டுள்ளது என்று கடுமையாக வைகோ விமர்சித்தா்.

சென்னையில் இருந்து மதுரை வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது: 7 பேர் விடுதலை குறித்து முன்னாள் ஆளுநரிடம் அளித்த மனுக்கள் குப்பைத்தொட்டியில் போடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளில் அளித்தவற்றில் 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி, வாக்களிக்காத மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். 7 பேர் விடுதலை குறித்து முன்னாள் ஆளுநரிடம் அளித்த மனுக்கள் குப்பைத்தொட்டியில் போடப்பட்டுள்ளது. தற்போது வந்துள்ள புதிய ஆளுநர் என்ன மாதிரி நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். உச்சநீதிமன்றம் 7 பேரை விடுதலை செய்ய எந்தவித தடையுமில்லை என கூறியுள்ளது. தமிழக அரசும் அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது புதிய ஆளுநர் செயல்களை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும். பெட்ரோல் கேஸ் விலை உயர்வு குறித்து நிருபர்கள் அவரிடம் கேட்டதற்கு. மத்திய அரசு சாமானிய மக்கள் நடுத்தர, மாதாந்திர ஊதியம் பெறும் ஊழியர்களின் சிரமங்களை நினைத்து பார்ப்பதில்லை. அதனால் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்துகொண்டே போகிறது என்றார் வைகோ.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?