யாருக்கெல்லாம் இ-பதிவு தேவையில்லை?

யாருக்கெல்லாம் இ-பதிவு தேவையில்லை?
X
இ-பதிவு அவசியமில்லாத நபர்கள் யார் யார் என்று சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

ஊரடங்கு காலத்திலும் சில அத்தியாவசிய பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர், அறிவுரையின்படி,

மருத்துவர்கள், சுகாதார துறையினர், பத்திரிகை ஊடகத்துறையினர், அத்தியாவசிய பணியாளர்கள், மத்திய மாநில அரசு பணியாளர்கள், தலைமைச் செயலக அலுவலர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் வழக்குரைஞர்கள் பணி நிமித்தமாக செல்லும்போது, வாகனத் தணிக்கை இடங்களில் அடையாள அட்டையுடன் செல்ல அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு இ-பதிவு தேவையில்லை.

மேலும், அனுமதிக்கப்படுகின்ற மேற்கண்ட துறையினர் அனைவரும் தங்களது அடையள அட்டையை எளிதில் பார்க்கும் வண்னம் வைத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. முக்கிய சாலைகளில் அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்கள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதற்கு பிரத்தியேகமாக தனி வழி எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மேற்கண்ட துறையினர் மற்றும் அவர்களது வாகனங்கள் தடுக்கப்பட்டு அனுமதிக்க மறுக்கப்படும் நிலையில் தொடர்புக்கு சென்னை பெருநகர மக்கள் தொடர்பு உதவி ஆணையாளர் தொலைபேசி எண் 23452320 மற்றும் 9498130011 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!