20ம் தேதி முதல் 18வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் தொடக்கம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது.
சென்னை டி.எம்.எஸ. வளாகத்தில் செஞ்சிலுவை சங்கம் தமிழக கிளையின் சார்பில் 2.18 கோடி மதிப்புள்ள ஆக்ஸிஜன் செறிவூடிகள் வழங்கப்பட்டது.
அதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். உடன் சுகாதார துறை செயலர் ராதா கிருஷ்ணன் , ராஜீவ்காந்தி அரசுமருத்துவமனை தலைவர் தேரணி ராஜன் ஆகியோர் இருந்தனர்.
மேலும்இந்த நிகழ்வில் அடையாளர் இன்னர் வீல் சங்கம் சார்பில் ஆக்சிஜன் ஆன் வீல்ஸ் என்கிற வாகனமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஒரே நேரத்தில் 6 நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இவ்வாகணத்தில் உள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பத்திரிகையாளர் சந்தித்தனர். அப்போது, இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கு தமிழக அரசு நன்றி தெரிவித்துக் கொள்கிறது .
மேலும் மருத்துவர் ராமன் என்பவர் மரணம் அடைந்ததாகவும் அதற்கு ரெம்டெசிவர் மருந்துதான் காரணம் எனவும் எங்களுக்கு ஒரு புகார் வந்தது. அதன்படி விசாரிக்கும் பொழுது அவர் பயன்படுத்திய ரெம்டெசிவர் மருந்தை சோதனை செய்ததில் அது போலியான ரெம்டெசிவர் என தெரியவந்தது.
திண்டிவனம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இந்த ரெம்டெசிவர் மருந்தானது வழங்கப்பட்டதாக தெரிகிறது.இதன்படி அந்த மருத்துவமனைக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ராமன் என்பவரின் மூலம்அந்த மருத்துவமனையில் சுரேஷ் என்பவர் இந்த மருந்துகளை வாங்கி உள்ளார்.சுரேஷ் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருந்துகளை தேவையில்லாமல் வாங்கச் சொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆட்டோக்களில் மருத்துவர் அனுமதியில்லாமல் ஆக்சிஜன் வழங்குவது தவறான ஒன்று.நோயுடன் வெளியில் வந்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். ஊரடங்கு மட்டுமே கொரொனா பரவலை தடுக்கும் ஒரே வழி. மக்கள் இயக்கமாக மாறி எல்லோரும் கை கொடுத்தால் தான் கடினமான சூழலில் இருந்து மீண்டு வர முடியும்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மீது நிறைய ஊழல் குற்றச்சாட்டு உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர். தற்போதைய சூழ்நிலையில் நாங்கள் யார் மீதும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. மக்களை காப்பதே ஒரே நோக்கமாக உள்ளது. 4300 படுக்கைகள் உள்ள கோரோணா சரி சென்டர் காலியாக உள்ளது. வீடுகளில் போதுமான வசதிகள் இல்லாதவர்கள் இந்த கேர் சென்டரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தற்போது O2 வசதிகளுடன் கூடிய படுக்கைகள் அதிகம் அமைக்கப்பட்டிருக்கிறது.தற்போதைய தொற்றானது ஒரு நபரில் இருந்து 400 நபர்களுக்கு பரவுகிறது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சைகள் காணப்படவில்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தடுப்பூசி 18 வயதிற்கு மேற்பட்டோருக்கானதடுப்பூசி போடும் பணி இருபதாம் தேதி முதல் முதல்வரால் தொடங்கப்பட உள்ளது.தற்போது 9 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவது நமது இலக்காக உள்ளது.
தற்போது ஆக்சிஜன் புனிதமான பொருளாக மாறியுள்ளது. அதனைப் பெற்றுக் கொள்வதற்கு இரவு பகல் பாராமல் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் உழைத்து கொண்டிருக்கின்றனர் என்றும் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu