எம்கேபி நகரில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

எம்கேபி நகரில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
X

கைது செய்யப்பட்ட இருவர்.

சென்னை எம்கேபி நகரில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவரை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் கைது செய்தனர்.

சென்னை கனக சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் 46. இவர் வியாசர்பாடி மாநகர போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காலை பணிக்கு வந்துகொண்டிருந்தபோது எம்கேபி நகர் மேற்க்கு அவென்யூ பகுதியில் டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் இவரது விலை உயர்ந்த செல்போனை பிடுங்கி சென்று விட்டனர். இதுகுறித்து சீனிவாசன் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆனால் அதில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்களின் புகைப்படங்கள் தெளிவாக தெரியவில்லை. இதனையடுத்து புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் செல்போன் எண்ணில் உள்ள ஐ.எம்.இ.ஐ. நம்பரை வைத்து தொடர்ந்து அந்த செல்போனை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த போனை பயன்படுத்திய ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கொடுத்த தகவலின் பேரில் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தினேஷ் 19 மற்றும் அதே பகுதியை சேர்ந்த தீனதயாளன் என்கின்ற கஞ்சா மணி 23 ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் மீது ஏற்கனவே பேசன் பிரிட்ஜ் வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருட்டு வழக்குகள் உள்ளதால் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!