வியாசர்பாடியில் பலூன் வியாபாரியை தாக்கி பணம் பறித்த மூவர் கைது

வியாசர்பாடியில் பலூன் வியாபாரியை தாக்கி பணம் பறித்த மூவர் கைது
X

வியாசர்பாடியில் பலூன் வியாபாரியை தாக்கிதால் கைது செய்யப்பட்டவர்கள்

குடிப்பதற்கு பணம் இல்லாததால் பலூன் வியாபாரியை தாக்கி பணம் பறித்த மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

சென்னை வியாசர்பாடி தேபர் நகர் எட்டாவது தெருவை சேர்ந்தவர் டேவின் 36. இவர் பலூன் வியாபாரம் செய்து வருகிறார் கடந்த 31ஆம் தேதி இரவு 9 மணி அளவில் வீட்டிற்குச் செல்லும்போது வியாசர்பாடி மேற்கு அவன்யூ சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுக் கொண்டு வெளியே வந்தார்

அப்போது மது போதையில் இருந்த மூவர் இவரை மடக்கி பணம் கேட்டுள்ளனர். இவர் பணம் தர மறுக்கவே அருகிலிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர் இதில் டேவின் பலத்த காயம் அடைந்தார். அங்கு பொதுமக்கள் கூடவே 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர் அருகிலிருந்தவர்கள் டேவினை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

சம்பவம் தொடர்பாக எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் வியாசர்பாடி ஜான் கென்னடி நகர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்கின்ற புருஷோத்தமன், கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் முரளிதரன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்

இவர்கள் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் உள்ளன. குடிப்பதற்கு பணம் இல்லாததால் இளைஞரை தாக்கி பணம் பறித்ததாக இவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story