பிரபல ரவுடி சிடி மணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது : சென்னை காவல் ஆணையர் அதிரடி

பிரபல ரவுடி சிடி மணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது : சென்னை காவல் ஆணையர் அதிரடி
X

சென்னை பிரபல ரவுடி சிடி மணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பிரபல ரவுடி சிடி மணி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை : பிரபல ரவுடி சிடி மணி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜூவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி சிடி மணி. ஆயுதங்கள் பதுக்கல், தொழில் அதிபர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்தல், போலீஸாரை துப்பாக்கியால் சுட்டது என, பல வழக்குகள் இவர் மீது உள்ளன.

முன்னதாக இவரை கடந்த 2-ம் தேதி சென்னை முட்டுக்காடு அருகே காவல் துறையினர் கைது செய்தனர். இவர் மீது 8 கொலை வழக்குகள் உள்பட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!