பெரம்பூரில் செல்போன் திருடனைப் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்

பெரம்பூரில் செல்போன் திருடனைப் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்
X
அவரிடமிருந்து இரண்டு விலையுயர்ந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்

பெரம்பூரில் செல்போன் திருடனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்( 50.) இவர் பெரம்பூர் ரயில் நிலையம் பகுதியில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 10 மணியளவில் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார் .

அப்பொழுது பேருந்து வந்த போது பேருந்தில் பயணிகள் ஏற முற்பட்டபோது இரண்டு பேர் சீனிவாசன் அருகே வந்து அவரது பின் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்துள்ளனர். அப்போது சுதாரித்துக்கொண்ட சீனிவாசன் அதில் ஒருவரை மடக்கிப் பிடித்தார். மற்றொருவர் தப்பிஓடிவிட்டார். பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை செம்பியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர், ஆந்திரமாநிலம், கிருஷ்ணா ஜில்லா பகுதியை சேர்ந்த ராஜி ( 31) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து இரண்டு விலையுயர்ந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story